பிரதமர் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்
பிரதமர் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்
UPDATED : செப் 27, 2026 02:23 PM
ADDED : செப் 27, 2026 02:25 PM
காஞ்சிபுரம்:
“பிரதமர் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்,” என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா அறிவித்துள்ளார்.
இது குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரி, தனியார் பொறியியல் கல்லுாரிகளில், இட ஒதுக்கீட்டின்கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பிரதமர் உயர் கல்வி உதவித்தொகை பெற, https://umis.tn.gov.in இணைய தள முகவரி மூலமாக, அக்., 21ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
மாணவ, மாணவியர் பெற்றோரின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
