கியூ.ஆர்.கோடு பயன்படுத்தி மாணவியர் புகார் அளிக்கலாம்!
கியூ.ஆர்.கோடு பயன்படுத்தி மாணவியர் புகார் அளிக்கலாம்!
UPDATED : செப் 06, 2024 12:00 AM
ADDED : செப் 06, 2024 11:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
போலீஸ் அக்கா திட்டத்தை பற்றி மாணவியர் தெரிந்து கொள்ளவும், அந்தந்த கல்லுாரிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அக்காவின் பெயர், மொபைல் எண் குறித்து தெரிந்து கொள்ளும் வகையிலும், மாநகர போலீஸ் சார்பில், கியூ.ஆர்., கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவியர் புகார் அளிக்கலாம்!
இந்த கியூ.ஆர்., அடங்கிய போஸ்டர்கள், கல்லுாரிகளின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
மாணவியர் தங்களின் மொபைல் போனில் இருந்து, இந்த கியூ.ஆர்., கோடை ஸ்கேன் செய்தால், தங்கள் கல்லுாரிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அக்கா யார், எந்த ஸ்டேஷனை சேர்ந்தவர், அவரின் மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து, அவருக்கு போன் செய்தோ, நேரில் சந்தித்தோ புகார் அளிக்கலாம்.