sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கைகோர்ப்பு; 100 ஆண்டு அரசு பள்ளிக்கு புதுப்பொலிவு

/

ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கைகோர்ப்பு; 100 ஆண்டு அரசு பள்ளிக்கு புதுப்பொலிவு

ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கைகோர்ப்பு; 100 ஆண்டு அரசு பள்ளிக்கு புதுப்பொலிவு

ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கைகோர்ப்பு; 100 ஆண்டு அரசு பள்ளிக்கு புதுப்பொலிவு


UPDATED : செப் 06, 2024 12:00 AM

ADDED : செப் 06, 2024 02:37 PM

Google News

UPDATED : செப் 06, 2024 12:00 AM ADDED : செப் 06, 2024 02:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு:
ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும் மனது வைத்தால் எந்த அரசுப் பள்ளியையும் தனியார் பள்ளிகளின் தரத்திற்கு உயர்த்த முடியும். அங்கேயும் தரமான கல்வியை வழங்க முடியும் என்பதை, மைசூரு பள்ளி நிரூபித்துள்ளது.

மைசூரு நகர் லட்சுமிபுரத்தின் காடி சவுக் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி 1918ம் ஆண்டு மைசூரு மகாராஜா நால்வடி கிருஷ்ணராஜ உடையாரால் கட்டப்பட்டது.

6 முதல் 60 வரை

நுாறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இப்பள்ளியில், மாணவர் எண்ணிக்கை குறைந்தது, தனியார் பள்ளிகளின் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் மூடப்படும் நிலையில் இருந்தது.

இந்நிலையில் 2016-ல், இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ரவிகுமார் பொறுப்பேற்றார். அப்போது இப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை வெறும் ஆறு மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது ஒரே பள்ளியில், மொத்தம் 60 மாணவர்கள் உள்ளனர்.

பள்ளியை சீரமைத்து, மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார். முன்னாள் மாணவர்கள், கிராமத்தினர் உதவியுடன் பள்ளியை மேம்படுத்தினார். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக இரண்டு ஜோடி சீருடை, பாடப்புத்தகங்கள், கல்விக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ரவிகுமாரின் சேவையை அடையாளம் கண்டு, நடப்பாண்டு கர்நாடக அரசு, நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

மூடும் நிலை
தலைமை ஆசிரியர் ரவிகுமார் கூறியதாவது:

சிறார்களிடம், நான் கடவுளை காண்கிறேன். நுாற்றாண்டு பழமையான பள்ளியில், மாணவர் எண்ணிக்கை குறைந்ததால், மூடும் நிலைக்கு வந்தது. கட்டடம் இடியும் நிலையில் இருந்ததால், மாணவர்கள் வருகை குறைந்தது.

இது எனக்கு வருத்தம் அளித்தது. என் சொந்த செலவில், மாணவர்களுக்கு இலவச சீருடை, பாட புத்தகங்கள் வழங்கினேன். அதன்பின் நன்கொடையாளர்கள், பழைய மாணவர்களிடம் உதவி பெற்று, பழைய கட்டத்ததை இடித்து, புதிதாக கட்டப்பட்டது.

இந்த பள்ளியில் படித்த பழைய மாணவர் சச்சிதானந்த மூர்த்தி, தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அவரை தொடர்பு கொண்டு, பள்ளியின் நிலையை விவரித்தேன். அவர் பள்ளியில் ஆடிட்டோரியம் கட்ட, 1.30 கோடி ரூபாய் வழங்கினார். தற்போது ஆடிட்டோரியம் கட்டும் பணிகள் நடக்கின்றன.

இன்னும் சில நாட்களில், பழைய வகுப்பறைகளை இடித்து, புதிய வகுப்பறைகள் கட்டப்படும். 100 ஆண்டுகள் பழமையான பள்ளியை, மூட விடமாட்டேன் என, சபதம் செய்திருந்தேன். இதை நிறைவேற்றி உள்ளேன்.






      Dinamalar
      Follow us