தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: நல்வழிபடுத்த பெற்றோர் வலியுறுத்தல்

போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: நல்வழிபடுத்த பெற்றோர் வலியுறுத்தல்

போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: நல்வழிபடுத்த பெற்றோர் வலியுறுத்தல்


UPDATED : ஜூலை 21, 2026 04:57 PM

ADDED : ஜூலை 21, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 04:57 PM ADDED : ஜூலை 21, 2026 05:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரித்துள்ளதால், அவர்களை நல்வழிப்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம் கல்வி மாவட்டங்களில், 147 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன் காலை மற்றும் இரவு நேரங்களில், தலா ஓரு வாட்ச்மேன் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, பள்ளி வளாகங்களில் சமூக விரோத செயல்படுகள் நடைபெறாமல் தடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளிகளில் பணிபுரிந்த வாட்ச்மேன் பணியிடங்கள் நிரப்ப, அரசு தடை விதித்தது. அதன் பின், பள்ளிகளில், வாட்ச்மேன் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்படவில்லை.

இதனால், பள்ளி வளாகங்களில் மர்ம நபர்கள் மாணவர்களை குறி வைத்து போதை வஸ்துகளை விற்பனை செ ய்கின்றனர். இது மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஈடுபடும் சூழல் உருவாகி உள்ளது.

மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களிடம், கூல் லிப் என்ற போதை பொருட்களை பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதுமட்டும் இன்றி ஒரு சில மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாக உள்ளனர்.

இவர்களை, ஆசிரியர்களால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. திருப்போரூர் தாலுகாவில், வனப்பகுதி அருகாமையில் உள்ள, அரசு பள்ளிகளில் பயிலும் சில மாணவர்கள், பள்ளியை புறக்கணித்து போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

இவர்களை, நல்வழிபடுத்த முயன்றாலும் ஆசிரியர்களுக்கு, பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளது.

எனவே, அரசு பள்ளிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஊழியர்கள், போதை பழக்கத்தில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து, மாணவர்களை நல்வழிபடுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:


அரசு பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள், டாக்டர்கள் போலீசார் கொண்ட குழுவினர் மூலம், மாணவர்களிடம், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தி வருகிறோம். பள்ளிகளில் வாட்ச்மேன் நியமிக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, திருப்போரூர் ஆகிய இடங்களில், பள்ளிகள் அருகாமையில் உள்ள பெட்டி கடைகளில் என்ற போதை பொருள் விற்பனை செய்யப்படுகிறது. மாணவர்களுக்கு எளிதில் கிடைத்துவிடுகிறது. இதனை தடுத்து, கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us