UPDATED : ஏப் 16, 2024 12:00 AM
ADDED : ஏப் 16, 2024 10:29 AM

பொள்ளாச்சி:
கோவை வேளாண் பல்கலை மாணவ, மாணவியருக்கு, கிராம தங்கல் திட்டத்தில் கீழ் சாகுபடி களத்தில் நேரடி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், நேற்று, ஆழியார் நகரில் தங்கிய மாணவர்கள், வேட்டைக்காரன்புதுாரில் உள்ள விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் களப்பயணம் மேற்கொண்டனர்.
இது குறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தென்னை 4.16 லட்சம் ெஹக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை உரங்கள், கரிம எருக்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் இட்டு மண் வளத்தை மேம்படுத்துவது அவசியமாகும். அவ்வகையில், குறைந்த இடுபொருட்கள் கொண்டு, தென்னை சாகுபடி செய்யும் முறை குறித்து அறிய மாணவியர் குழு களப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னை நடுவே, ஊடு பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. தவிர, வேளாண் கழிவுகள் அனைத்தும் தோப்பிலேயே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதனை, செய்முறை விளக்கத்துடன் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.