UPDATED : பிப் 03, 2025 12:00 AM
ADDED : பிப் 03, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
புதுச்சேரியில் பைக்கில் சாகசம் செய்த இரு கல்லுாரி மாணவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.
உருளையன்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து சென்றனர். மறைமலையடிகள் சாலையில் 2 இளைஞர்கள் பைக்கில் சாகசம் செய்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், கல்லுாரியில் படித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களின் பெற்றோரை வரவழைத்து கடுமையாக எச்சரித்து, மாணவர்களை அனுப்பி வைத்தனர்.