100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு
UPDATED : ஏப் 10, 2026 07:17 PM
ADDED : ஏப் 10, 2026 07:21 PM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பையூர் தோட்டக்கலை கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தில் தோட்டக்கலை கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியரின், 100 சதவீத ஓட்டளிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கலெக்டர் தினேஷ்குமார் நேற்று பார்வையிட்டார்.
அப்போது தேர்தலில், 100 சதவீத ஓட்டளிப்பதை வலியுறுத்தி தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ, மாணவியர் பதாகைகளை வைத்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.
மேலும், சிலம்ப நிகழ்ச்சி, வாக்காளர் விழிப்புணர்வு பாடலை சுயமாக எழுதி பாடினர். இதைத்தவிர காய்கறி, பழங்கள், மலர்கள் மூலம், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற வாசகம் அமைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கூடுதல் கலெக்டர் (பயிற்சி) க்ரிதி காம்னா, தோட்டக் கலைத்துறை கல்லுாரி முதல்வர் அனிசா ராணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
