தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பசுமை சூழலில் கல்வி கற்கும் மாணவர்கள்

பசுமை சூழலில் கல்வி கற்கும் மாணவர்கள்

பசுமை சூழலில் கல்வி கற்கும் மாணவர்கள்


UPDATED : அக் 05, 2026 02:59 PM

ADDED : அக் 05, 2026 03:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 02:59 PM ADDED : அக் 05, 2026 03:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
இயற்கை மீது ஆர்வம் ஏற்படுவது என்பது மனிதனுக்கு இயல்பான ஒன்று. மனிதனுக்கு மரங்களோடு இருக்கவே விருப்பமுண்டு. ஆனால் தற்போது மனிதன் பணத்தோடு இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கற்கும் கல்வியை இயற்கை சூழலில் கற்க முடிவதும் ஒரு வரம் தான்.

அந்த வகையில் விருதுநகர் செந்திக்குமர நாடார் கல்லுாரி வளாகம் எங்கும் பசுமை தோட்டம் நிறைந்து காணப்படுகிறது. அனைத்து வழிப்பாதைகளின் இருபுறமும் வேப்ப மரங்கள், அரச மரங்கள் அணிவகுக்கின்றன.

நாளுக்கு நாள் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் தீராத சுவாச கோளாறு நோய்கள் கூட ஏற்படக் கூடும். நம்மை சுற்றி மரங்கள் இருப்பது நமக்கு மிகவும் நல்லது. மரத்திற்கும் உயிர் உண்டு.

சாதாரண வெப்பநிலையில் இருந்து மரங்கள் 5 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை குறைக்கிறது. விருதுநகர் ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லுாரி வளாகத்திற்குள் சென்றால் குளு குளுவென பசுமையாக இருக்கிறது. இங்கு இதமான காற்று எப்போதும் மாணவர்களை தாலாட்டுகிறது.

கல்லுாரியில் எகிப்தில் உள்ளது போல் பிரமீடு ஒன்று உள்ளது. பசுமையான மரங்களுக்கு நடுவே பிரமீடு அமைந்துள்ளது. தினசரி காலை பொதுமக்கள், மாணவர்கள் பிரமீடு வளாகத்திற்குள் வந்து தியானம் செய்கின்றனர். மாணவர்கள், ஆசிரியர்களின் மன அழுத்தத்தை போக்கவே இந்த பிரமீடு கட்டப்பட்டது. ஆனால் தற்போது பொதுமக்களும் பயன்படுத்துகின்றனர்.

தாவரவியல் துறை சார்பில் தோட்டங்கள் உள்ளன. இதில் அடுக்கு செம்பருத்தி, இட்லிபூ, டிவிடிவி (இதை வளர்த்தால் வீட்டிற்குள் விஷபூச்சிகள் வராது), மகிழமரம் (இதன் பூக்கள் சிவன் வழிபாட்டிற்கு வைக்கப்படுகிறது.), சவுக்கு மரம் போன்ற மரங்கள் அமைந்துள்ளன.

பசுமையான சூழல் மாணவர்களுக்கு நல்ல மனநிலையை கொடுக்கும். பசுமையான கல்வியே என்றும் மாணவர்களின் நெஞ்சில் நிற்கும். இவை தவிர சுற்றுச்சுழல் கல்வி துறை சார்பில் மூலிகை தோட்டம் ஒன்று உள்ளது. இதில் கற்றாழை, துளசி, பிரண்டை, ஓமம், மணத்தக்காளி, சுக்கு போன்ற மூலிகை தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.

மரங்கள் அதிகம் இருக்க காரணம் தேனீக்களி்ன் வரவுதான். தேனீக்கள் அயல் மகரந்த சேர்க்கை அதிகரித்து வளாகத்தில் செடி, கொடிகளை அதிகரித்துள்ளது. நாம் வாழும் சூழல் பிற உயிரினங்களுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அதற்கு மரங்கள் வளர்ப்பதே தீர்வாகும்.

- ராஜா, முதல்வர், ஸ்ரீ வித்யா பி.எட். கல்லூரி.

பலவகையான மரங்கள் மனதிற்கு திறந்த மனபான்மையை அதிகரிக்கிறது. தாவரவியல் துறையினருக்கு தான் இயற்கை மீது ஆர்வம் உண்டு என நினைப்பது தவறு. எங்கள் கல்லுாரியில் அனைத்து மாணவர்களுக்கும் மரங்கள், செடிகள் மீது அளப்பரிய அன்பு உண்டு. மரம் நட்டது கல்லுாரி நிர்வாகமாக இருந்தாலும் அதை பராமரிப்பது மாணவர்கள் தான்.

- சுந்தரபாண்டியன், கல்லுாரி முதல்வர்.

கல்வி கற்கும் மாணவர்களுக்கு பசுமையான சூழலை ஏற்படுத்தி தருவதே கல்லுாரியின் நோக்கமாக இருக்க வேண்டும். அப்படி ஒவ்வொரு கல்லுாரியும் செய்தால் தமிழ்நாட்டில் மரம் வளர்க்கும் பழக்கம் அதிகமாகும். மரங்களை பராமரிக்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.

எங்கள் கல்லுாரியில் செவ்வாய், வியாழன் தோறும் தலா ஒரு மாணவர் ஒரு மரத்தை பராமரிக்கிறார்கள் இது உளவியில் ரீதியாகவும் அவர்களுக்கு உதவும். இந்த சிறிய துவக்கம் நாளை தமிழ்நாட்டில் பார்க்குமிடமெல்லாம் மரங்கள் இருக்க செய்யும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us