மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்
மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்
UPDATED : ஜன 30, 2026 02:23 PM
ADDED : ஜன 30, 2026 02:25 PM

அருப்புக்கோட்டை: ''மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்'' என அரசின் இலவச லேப்டாப் வழங்கி மாணவர்களுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவுரை வழங்கினார்.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி அவர் பேசியதாவது:
உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. அதற்கு இணையாக நாமும் பயணிக்க வேண்டி உள்ளது. அனைவருக்கும் அலைபேசி, லேப்டாப் அவசியமாகிவிட்டது. மாணவர்களும் அதற்கு ஏற்றார் போல் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்யுள்ளது.
இதற்கு உறுதுணையாக அரசும் தன் கடமையை செய்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் மாணவர்கள் படித்து முன்னேறி உள்ளனர். மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நிறுவனத்தில் கிடைக்கும் வேலையை பிடித்துக் கொள்ள வேண்டும். அதில் அனுபவம் பெற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம். கல்லூரி படிப்பை முடித்த பின் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை எந்த வகையில் பெற்று தருவது என்ற சிந்தனையில் முதல்வர் இருக்கிறார்.
அவர்களுக்கு பல்வேறு தொழிற்சாலைகள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து இங்கு பல்வேறு தொழில்களை தொடங்கி வேலை வாய்ப்புகளை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மாணவர்கள் படித்து வேலை செய்கின்றனர். உங்களுக்கு கொடுக்கப்பட்ட லேப்டாப்புகளை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். ஆக்கபூர்வமாக அதை பயன்படுத்துங்கள் என்று பேசினார்.
முன்னதாக கலெக்டர் சுகபுத்திரா தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., மாரிமுத்து முன்னிலை வகித்தார்.

