sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பருவகால மாற்றத்தால் மாணவர்களுக்கு காய்ச்சல்; தி.மு.க., அரசு மீது சரவணன் குற்றச்சாட்டு

/

பருவகால மாற்றத்தால் மாணவர்களுக்கு காய்ச்சல்; தி.மு.க., அரசு மீது சரவணன் குற்றச்சாட்டு

பருவகால மாற்றத்தால் மாணவர்களுக்கு காய்ச்சல்; தி.மு.க., அரசு மீது சரவணன் குற்றச்சாட்டு

பருவகால மாற்றத்தால் மாணவர்களுக்கு காய்ச்சல்; தி.மு.க., அரசு மீது சரவணன் குற்றச்சாட்டு


UPDATED : ஆக 07, 2025 12:00 AM

ADDED : ஆக 07, 2025 09:29 AM

Google News

UPDATED : ஆக 07, 2025 12:00 AM ADDED : ஆக 07, 2025 09:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
பருவகால மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க., அரசு குறட்டை விடாமல் பள்ளி, கல்லுாரிகளில் உடனடியாக மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது:


தற்போது பருவ கால மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலால் உடல் சோர்வு, தலைவலி, வாந்தி, உடல் வலி ஏற்படுகிறது. குறிப்பாக மாணவர்கள் அதிகம் பாதித்து வருகின்றனர். ஆனால் தி.மு.க., அரசோ தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், புதுப்புது பெயர்களை கண்டுபிடித்து அதில் விளம்பரத்தை தான் தேடுகிறார்கள்.

தற்போது கூட நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தை விளம்பரப்படுத்தி அதில் 1,256 முகாம்களை நடத்துவோம் என்கிறார்கள். இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஏற்கனவே மக்களை தேடி மருத்துவம் திட்டமும் மக்களிடத்தில் தோல்வி அடைந்து விட்டது.

தற்போது தமிழகத்தில் 24,310 அரசு தொடக்கப் பள்ளிகளும், 7024 அரசு நடுநிலைப் பள்ளிகளும்,3135 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 3110 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. 8,328 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. தவிர 12,382 தனியார் பள்ளிகள் உள்ளன. காலாண்டு தேர்வு விரைவில் வரவுள்ளதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இனியும் கும்பகர்ணனை போல் ஸ்டாலின் அரசு குறட்டை விடாமல், போர்க்கால அடிப்படையில் பள்ளி, கல்லுாரிகளில் மருத்துவ முகாம் நடத்தி தேவையான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us