UPDATED : ஏப் 22, 2024 12:00 AM
ADDED : ஏப் 22, 2024 08:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
சூரியன் தினமும் நண்பகலில் உச்சியில் இருப்பதுபோல் தோன்றினாலும், மிகச்செங்குத்தாக வரும் நிகழ்வு ஆண்டுக்கு இருமுறை நடக்கிறது. இதை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என அழைக்கின்றனர்.
இதனால் பூஜ்ய நிழல் குறித்து, சேலம் ஆஸ்ட்ரோ கிளப் சார்பில், இரும்பாலை அருகே கே.ஆர்.தோப்பூர் கிருஷ்ணம்புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
கிளப் செயலர் மேகலா, மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். மதியம், 12:14 முதல், 12:17 வரை, பூஜ்ய நிழல் விழுந்தது. இதில் மாணவர்கள் நிற்கும்போது அவர்களின் காலடியில் நிழல் இல்லாமல் இருப்பதை கண்டு வியப்படைந்தனர்.