UPDATED : மார் 10, 2024 12:00 AM
ADDED : மார் 10, 2024 08:47 AM
மதுரை:
மதுரையில் அயோத்தி ராமர் கோவில் நினைவு சிறப்பு அஞ்சல் தலைகள் சந்தன மர நறுமணத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது என மதுரை முதுநிலை கோட்டம் அஞ்சலக கண்காணிப்பாளர் சாமுவேல் ஜவஹர் ராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
ராம ஜென்ம பூமி கோவிலின் நினைவு அஞ்சல் தலைகளை கொண்ட ஒரு தபால் தலை, இந்திய அஞ்சல் துறை சார்பில் பிரதமர் மோடியால் வெளியிடப்பட்டது. மினியேச்சர் ஷீட் எனப்படும் இந்த தபால் தலை தாள், தங்கப் படலம், சந்தன மர நறுமணம் வீசும் சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமஜென்ம பூமியில் இருந்து எடுக்கப்பட்ட சராயு நதி தண்ணீர், மணல் கொண்டு இது அச்சிடப்பட்டுள்ளது.இந்த தனித்துவமான மினியேச்சர் தாள் நினைவுப் பொருளாக மாற்றப்பட்டு தபால் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை இல்லங்களில் நினைவு சின்னமாக காட்சி பெட்டியிலும், சுவர்களில் தொங்கவிட்டும் பயன்படுத்தலாம். இதன் விலை 500 ரூபாய்.விருப்பம் உள்ளவர்கள் மதுரை தலைமை தபால் நிலையம் அல்லது 90807 02365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆர்டரின் பெயரில் மொத்தமாகவும், டெலிவரி செய்யும் வசதி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.