சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஐஐடி-ல் இடம்
சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஐஐடி-ல் இடம்
UPDATED : மார் 10, 2025 12:00 AM
ADDED : மார் 10, 2025 06:12 PM

சென்னை:
சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு சென்னை ஐஐடி-ல் இளங்கலை பட்டப்படிப்பைத் தொடர வாய்ப்பு வழங்கப்படுகிறது.
2025-26 கல்வியாண்டு முதல் ஜேஇஇ (அட்வான்ஸ்டு) கட்டமைப்புக்குள் வராமல் அறிவியல் ஒலிம்பியாடில் சிறந்து விளங்குவோர் பிரிவில், ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் மாணவிகளுக்கு பிரத்யேகமாக ஒரு இடம் உள்பட தலா 2 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அறிவியல் ஒலிம்பியாடில் சிறந்து விளங்குவோர் (ஸ்கோப்) என்ற இப்பிரிவிற்கு 2025-26 கல்வியாண்டு முதல் ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) கட்டமைப்புக்குள் வராமல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
முதல்பேட்ச்-க்கான விண்ணப்ப பதிவு ஜூன் 3, 2025 முதல் தொடங்கும். அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டல்கள், விதிமுறைகளை அறிந்து கொள்ள https://ugadmissions.iitm.ac.in/scope என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.