UPDATED : ஜூலை 08, 2026 06:23 PM
ADDED : ஜூலை 08, 2026 06:26 PM
அ நிறம் | அளவு
உடுமலை:
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த, மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர். இப்போட்டிகள் உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி இலக்கியா முதல் பரிசும், பத்தாம் வகுப்பு மாணவி ரக் ஷனா இரண்டாம் பரிசும் பெற்றனர். இவர்கள் மாநில அளவில் நடக்கும் பேச்சுப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவியரையும், ஆசிரியர் மகாலட்சுமியையும், உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, செயலர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் மாலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
