UPDATED : நவ 26, 2024 12:00 AM
ADDED : நவ 26, 2024 08:08 AM
கோவை:
மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் -RKVY-RAFTAAR-R-ABI மானியம் வழங்கும் விழா கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் மூலம் புதிய வேளாண் தொழில்முனைவோருக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் துளிர் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மானியதாரர்களுக்கு ரூ.1.05 கோடி மானியத் தொகையை தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி வழங்கினார். இதில் அவர் இளம் பட்டதாரிகளை வேளாண்மை சார்ந்த தொழிலில் ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம், நிலையான மற்றும் லாபகரமான விவசாய வணிகத்திற்காக புதிய தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்தவும், செயல்படுத்தவும், விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர்களை வழிகாட்டும் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குனர் முனைவர் சோமசுந்தரம், தொழில்நுட்ப வணிக காப்பக செயல் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஞானசம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.