தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்; நாசா சொல்வது இதுதான்!

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்; நாசா சொல்வது இதுதான்!

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்; நாசா சொல்வது இதுதான்!


UPDATED : மார் 14, 2025 12:00 AM

ADDED : மார் 14, 2025 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2025 12:00 AM ADDED : மார் 14, 2025 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
9 மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என நாசா விளக்கம் அளித்துள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார். கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் அவரும், பேரி வில்மோரும் விண்வெளி நிலையம் சென்று 8 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தங்கி உள்ளனர். அவர்களை மீட்க தொடர் முயற்சிகள் எடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. கடைசியில் ஸ்டார்லைனரில் விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவது மிகவும் ஆபத்தானது என்று விண்வெளி நிறுவனம் அறிவித்தது. சுனிதா, வில்மோர் இல்லாமலேயே கடந்த செப்டம்பரில் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்பியது.

இதையடுத்து இருவரையும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் பூமிக்கு அழைத்து வர நாசா முடிவு செய்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டுவருவேன் என உறுதி அளித்தார். சில தினங்களுக்கு முன், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோரும் எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16ல் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்து இருந்தது.

மீண்டும் சிக்கல்!

இந்நிலையில், 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை அழைத்து வர புளோரிடாவில் டிராகன் விண்கலத்துடன் சீறி பாய தயாராக இருந்த பால்கன் 9 ராக்கெட்டில், கடைசி நிமிடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.18 மணிக்கு டிராகன் விண்கலத்தை ஏவ இருந்த நிலையில் கடைசி நிமிடம் ஏற்பட்ட கோளாறால் ஒத்திவைக்கப்பட்டது.

நாசா விளக்கம்

இது குறித்து நாசா கூறியதாவது: சுனிதாவை அழைத்து வரும் க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம். சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர மீண்டும் ராக்கெட் ஏவக் கூடிய தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு நாசா விளக்கம் அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us