UPDATED : ஜூலை 24, 2024 12:00 AM
ADDED : ஜூலை 24, 2024 05:25 PM
சென்னை:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் வரும் 26ம் தேதி முதல் வெளியாகிறது.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கடந்த ஜூன்/ஜூலை மாதங்களில் நடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம். பிளஸ் 2 சான்றிதழ் ஜூலை 26ம் தேதியும், பத்தாம் வகுப்பு சான்றிதழ் 30ம் தேதியும், பிளஸ் 1 சான்றிதழ் 31ம் தேதியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் மற்றும் மறுகூட்டல்
விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள் குறிப்பிட்டுள்ள தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் சென்று கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பிளஸ் 2 விடைத்தாள் நகல்: ஜூலை 29, 30; பாடம் ஒன்றிற்கு ரூ.275.
பிளஸ் 1 விடைத்தாள் நகல்: ஆக.,1, 2; பாடம் ஒன்றிற்கு ரூ. 205; உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305
பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல்: ஆக.,1,2; பாடம் ஒன்றிற்கு ரூ.275.
தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

