UPDATED : மே 16, 2025 12:00 AM
ADDED : மே 16, 2025 04:12 PM

சென்னை:
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூலை மாதம் நடைபெறும் துணைத்தேர்வுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 4ம் தேதி துவங்கி ஜூலை 10ம் தேதி வரை நடைபெறவுள்ளன. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும்.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
ஜூலை 4 (வெள்ளி): தமிழ்மொழி மற்றும் இதர மொழிகள்
ஜூலை 5 (சனி): தேர்வுத் தேர்ந்தெடுக்கக்கூடிய மொழி
ஜூலை 7 (திங்கள்): ஆங்கிலம்
ஜூலை 8 (செவ்வாய்): கணிதம்
ஜூலை 9 (புதன்): அறிவியல்
ஜூலை 10 (வியாழன்): சமூக அறிவியல்
பிளஸ் 1 தேர்வுகள் ஜூலை 4 முதல் ஜூலை 11 வரை நடைபெறுகிறது. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும்.
தேர்வு அட்டவணை:
ஜூலை 4 (வெள்ளி): தமிழ்மொழி மற்றும் இதர மொழிகள்
ஜூலை 5 (சனி): ஆங்கிலம்
ஜூலை 7 (திங்கள்): உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம், அடிப்படை பொறியியல் பாடங்கள், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை
ஜூலை 8 (செவ்வாய்): இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள்
ஜூலை 9 (புதன்): தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி, உயிர்வேதியியல், மேம்பட்ட தமிழ், வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்வழி நர்சிங், மின்சார பொறியியல்
ஜூலை 10 (வியாழன்): வேதியியல், கணக்கியல், புவியியல்
ஜூலை 11 (வெள்ளி) : கணிதம், உயிரியல் ஆய்வு, வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, ஆடைகள் வடிவமைப்பு, உணவுசேவை, வேளாண் அறிவியல், பொதுநல நர்சிங்
மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுடன் தேர்வு மையங்களுக்கு முறையாக நேரத்தில் வர வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.