புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு - ஹீரோ மோட்டோகார்ப், தொழில்துறை துறை ஒப்பந்தம்
புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு - ஹீரோ மோட்டோகார்ப், தொழில்துறை துறை ஒப்பந்தம்
UPDATED : ஆக 15, 2025 12:00 AM
ADDED : ஆக 15, 2025 10:13 AM
புதுடில்லி:
தொடக்க கால புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஹீரோ - புதுமைக் கண்டுபிடிப்புக்கான விரைவுப்படுத்துதல் திட்டம் மூலம், எதிர்கால போக்குவரத்து, தூய்மை தொழில்நுட்பம் மற்றும் நவீன தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இக்கூட்டாண்மை ஆதரவு அளிக்கும்.
இதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ஜெர்மனி மற்றும் இந்தியாவில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி & மேம்பாட்டு மையங்கள், நிறுவனத்தின் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், கூட்டாளர்கள் போன்ற வலையமைப்பு மற்றும் வழிகாட்டுதலுக்கான சிறப்பு அணுகல் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை இணைச் செயலாளர் சஞ்சீவ், இந்த கூட்டாண்மை, இந்தியாவின் போக்குவரத்து சவால்களுக்கு தீர்வு காணும் உற்பத்தி சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

