UPDATED : ஜூலை 10, 2024 12:00 AM
ADDED : ஜூலை 10, 2024 09:41 AM
நாமக்கல் :
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கு, நடப்பாண்டிற்கான கணக்கெடுப்பு பணி கடந்த மே மாதம், 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
நாமக்கல் வட்டார வளமையம் சார்பில், நேற்று நகராட்சிக்கு உட்பட்ட செல்வகணபதி நகர், பெரியப்பட்டி பகுதி-களில் கணக்கெடுப்பு நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பா-ளர்கள் சிந்துஜா, செந்தில்குமரன், வட்டார வள மேற்பார்வையாளர் சசிராணி, ஆசிரியர் பயிற்றுனர்கள் கவிதா, ரவிக்குமார், பெரியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசி-ரியை பத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 15 வட்டாரங்களில் இதுவரை, 2,968 குடியிருப்புகளில், 13,981 கற்போர்களும், 907 தன்னார்வலர்களும் கண்டறியப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.