தாட்கோவில் ஆடை வடிவமைப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தாட்கோவில் ஆடை வடிவமைப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
UPDATED : பிப் 08, 2026 11:42 AM
ADDED : பிப் 08, 2026 11:45 AM
கரூர்:
தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், தனியார் நிறுவனத்துடன் உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி. ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார மேலாண்மை திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். www.tahdco.com என்ற என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

