UPDATED : நவ 22, 2024 12:00 AM
ADDED : நவ 22, 2024 04:12 PM
சென்னை:
புதுடில்லி பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில், தமிழ்நாடு நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
புதுடில்லியில் 43வது இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சி - 2024, அங்குள்ள பிரகதி மைதானத்தில் நடந்து வருகிறது. அதில், தமிழக அரசின் மகத்தான திட்டங்கள், சாதனைகள் குறித்த பல்வேறு துறைகளின் புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன.
பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும், தங்களது மாநில நாள் விழாவை கொண்டாடி வருகின்றன. அதன்படி, பிரகதி மைதானத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில், தமிழக நாள் விழா நேற்று நடந்தது.
அதை குத்துவிளக்கு ஏற்றி, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். இதையொட்டி இயல், இசை, நாடக மன்றம் சார்பில், தமிழகத்தில் புகழ்பெற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வைத்தியநாதன், இணை இயக்குனர் தமிழ் செல்வ ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.