தமிழ் புதல்வன் திட்டம்: 9779 மாணவர்களுக்கு ரூ.1000
தமிழ் புதல்வன் திட்டம்: 9779 மாணவர்களுக்கு ரூ.1000
UPDATED : ஆக 14, 2024 12:00 AM
ADDED : ஆக 14, 2024 08:21 AM
மதுரை :
மதுரைக் கல்லுாரியில் நடந்த விழாவில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உயர்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் தியாகராஜன் வழங்கினார்.
அமைச்சர் பேசுகையில், இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 13 பொறியியல் கல்லுாரிகள், 33 கலை அறிவியல் கல்லுாரிகள், 2 மருத்துவக் கல்லுாரிகள், 7 தொழிற்பயிற்சி நிலையங்கள், 12 பாலிடெக்னிக் கல்லுாரிகள், ஒரு சட்டக் கல்லுாரி, ஒரு பல்கலை, 27 பார்மஸி மற்றும் ஒரு வேளாண்மை கல்லுாரி உட்பட 97 கல்லூரிகளில் பயிலும் 9779 மாணவர்கள் முதற்கட்டமாக பயன் பெறுகின்றனர் என்றார்.
மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், டி.ஆர்.ஓ., சக்திவேல், தளபதி எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, மகளிர் உரிமைத்துறை துணை இயக்குநர் குணசேகரி, மாவட்ட சமூக நல அலுவலர் காந்திமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரிச்சியூர் பாத்திமா மைக்கேல் பொறியியல் கல்லுாரியில் நடந்த விழாவை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ., வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா, கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை, கொட்டாம்பட்டி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சண்முகபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.