UPDATED : செப் 20, 2024 12:00 AM
ADDED : செப் 20, 2024 09:46 AM
கரியாப்பட்டி:
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் காரியாப்பட்டி கிராமத்தில் சுற்றுப்பயணம் சென்றார்.
பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார். திடீரென காரியாபட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்குள் நுழைந்தார். கலெக்டரை பார்த்த ஆசிரியர்கள் மிரண்டு போய் நின்றனர். மாணவர்கள் பதிவேட்டை எடுத்து பார்த்தார். மாணவர்களின் மதிப்பெண் பட்டியல், மாணவர்களின் கல்வித் தரம், கற்பிக்கும் முறைகள் மற்றும் வருகைப் பதிவேடு குறித்து ஆசிரியைகளிடம் கேட்டறிந்தார். பாடத்தில் பின்தங்கிய மாணவர்களை அழைத்து அவர்களது பதிவேடுகள் மற்றும் நோட்டு, புத்தகங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அதில் மாணவர்கள் நோட்டில் எதுவும் எழுதவில்லை. டென்சன் ஆன கலெக்டர் ஆசிரியைகளை கண்டித்தார். ஏன் மாணவர்களை கண்காணிக்கவில்லை என கேட்ட கலெக்டர், இப்படியே போனால் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் என்னவாகும்? எப்படி பாஸ் ஆவாங்க எனவும் கேட்டார். திடீரென ஒரு ஆசிரியையிடம் உங்களுக்கு இன்னும் எத்தனை வருஷம் சர்வீஸ் இருக்கு என கேட்டார். ஆசிரியை வெளவெளத்து போய் பதில் சொல்ல தடுமாறினார். மாணவர்கள் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைச்சீங்கன்னா தயவு செஞ்சு நீங்க விஆர்எஸ் கொடுத்துட்டு போனா நல்லா இருக்கும் என சொல்லிவிட்டு கிளம்பினார்.