UPDATED : ஏப் 18, 2024 12:00 AM
ADDED : ஏப் 18, 2024 05:04 PM
தாவணகெரே:
தேர்தல் பயிற்சிக்கு ஆஜராகாதது குறித்து கேள்வி எழுப்பிய தாசில்தாரை, அவமதிப்பாக பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
லோக்சபா தேர்தல் பணியில் பங்கேற்க, அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதே போன்று, தாவணகெரே, சென்னகிரியில் ஏப்ரல் 8ல் முதற்கட்ட பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சிவலிங்கேஸ்வரா அரசு பி.யு., கல்லுாரியில் நடந்த பயிற்சியில் பங்கேற்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் சென்னகிரியின் எஸ்.கே.எம்.எஸ்., மில்லத் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சையத் சுல்தான் அகமது, பயிற்சிக்கு ஆஜராகாமல், அனுமதியும் பெறாமல், பெண் ஊழியருடன் வெளியே சென்றார். இது குறித்து தாசில்தார் கேள்வி எழுப்பினார்.
அப்போது பெண்ணின் முன்னிலையிலேயே, தாசில்தாரை ஆசிரியர் சையத் சுல்தான் வாய்க்கு வந்தபடி திட்டினார்.
இது தொடர்பாக, தேர்தல் அதிகாரியான, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷிடம், தாசில்தார் புகார் செய்தார். விசாரணையில் சையத் சுல்தான் தவறாக நடந்து கொண்டது உறுதியானது. அவரை, சஸ்பெண்ட் செய்து, தேர்தல் அதிகாரி நேற்று உத்தரவிட்டார்.