UPDATED : ஏப் 18, 2024 12:00 AM
ADDED : ஏப் 18, 2024 05:11 PM
திருப்பூர்:
ரஷ்யா - உக்ரைன் போர் சூழலால், ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி குறைந்தது. பணவீக்கம் நிலவியதால், அமெரிக்க ஏற்றுமதியும் சரிந்தது. புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகவில்லை.
தொழில்முனைவோரின் விடாமுயற்சி காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, பிப்., மற்றும் மார்ச் மாதங்களில் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்., மாத ஏற்றுமதி, 11,628 கோடி ரூபாயாக இருந்தது; கடந்த பிப்., மாதம், 12,248 கோடியாக உயர்ந்தது. இதேபோல், கடந்த ஆண்டு மார்ச் மாதம், 11,917 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மாதம் 12,224 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இனிவரும் நாட்களில், ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
ஏற்றுமதி
காலம் மதிப்பு (ரூபாய் கோடியில்)
2023 பிப்ரவரி 11,628
2024 பிப்ரவரி 12,248
2023 மார்ச் 11,917
2024 மார்ச் 12,224
2021-22 1.19 லட்சம்
2022-23 1.30 லட்சம்