மாணவர் சேர்க்கை அதிகரிக்க பாரதியாராக மாறிய ஆசிரியை
மாணவர் சேர்க்கை அதிகரிக்க பாரதியாராக மாறிய ஆசிரியை
UPDATED : மே 03, 2024 12:00 AM
ADDED : மே 03, 2024 12:25 PM

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிபவர் கிறிஸ்டிஜோதி, 48. இவர் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையின் போது, வேடங்கள் அணிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில், இவர் அவ்வையார் வேடம் அணிந்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிலையில், பாரதியார் வேடம் அணிந்த கிறிஸ்டிஜோதி, புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையார் குளம் பகுதியில் சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன், வீடு வீடாக சென்று மாணவர்களை அரசு பள்ளியில் சேர வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதுகுறித்து, கிறிஸ்டிஜோதி கூறுகையில், வேடம் அணிந்து செல்லும் போது, பெற்றோர்கள் மத்தியில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பர் என்றார்.