UPDATED : ஜன 01, 2026 08:45 PM
ADDED : ஜன 01, 2026 08:47 PM

சென்னை:
தமிழகத்தில், 50 சதவீத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம், வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
தமிழகத்தில் 8,000க்கும் அதிகமான அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், பணியாற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில், ஒவ்வொரு மாத இறுதியிலும், 30 அல்லது 31ம் தேதிகளில், சம்பளம் வரவு வைக்கப்படும்.
இந்நிலையில், தமிழகத் தில், 50 சதவீத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம், வங்கி கணக்கில் நேற்று வரவு வைக்கப்படவில்லை.
இது குறித்து, ஆசிரியர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு மாதம் இறுதியிலும், சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், தற்போது, பள்ளிகளில் இருந்து பில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்கு நிதி பற்றாக்குறை காரணம் என, தகவல் வெளியாகி உள்ளது' என்றனர்.

