'கற்பித்தல் பணிகளுக்கு மட்டுமே ஆசிரியரை பயன்படுத்த வேண்டும்'
'கற்பித்தல் பணிகளுக்கு மட்டுமே ஆசிரியரை பயன்படுத்த வேண்டும்'
UPDATED : அக் 02, 2026 06:23 PM
ADDED : அக் 02, 2026 06:24 PM
திருப்பூர்:
'ஆசிரியர்களை கற்றல்-கற்பித்தல் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தவும், பள்ளிகளில் காலியாக உள்ள காவலர், ஏவலர், அலுவலக எழுத்தர் பணியிடங்களுக்கும் தனிப் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும்.
எமிஸ் பதிவேற்றம், கல்வி உதவித்தொகை, பஸ் பயண அட்டை, சீருடை, மிதிவண்டி வழங்குதல், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. பதிவேடுகளை பராமரிக்கும் பணியாலும் கற்பிக்கும் நேரம் குறைந்து, கற்றல்-கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.
அரசின் மாணவர் நலத்திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அவற்றை செயல்படுத்த தனிப் பணியாளர்களை நியமித்து, ஆசிரியர்களின் முழு நேரத்தையும் கற்பித்தல் பணிக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
