தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்ச்சி விகிதம் உயர்த்திட ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: கலெக்டர் பிரசாந்த்

தேர்ச்சி விகிதம் உயர்த்திட ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: கலெக்டர் பிரசாந்த்

தேர்ச்சி விகிதம் உயர்த்திட ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: கலெக்டர் பிரசாந்த்


UPDATED : பிப் 02, 2026 07:52 PM

ADDED : பிப் 02, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2026 07:52 PM ADDED : பிப் 02, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திட ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

பள்ளி கல்வி துறை சார்பில் கடந்த கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, கள்ளக்குறிச்சி இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, மாவட்டத்தில் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் கேட்டு கொண்டார். வளமிகு வட்டாரங்கள் திட்டத்தின் மூலம் தியாகதுருகம், கல்வராயன்மலை வட்டாரங்களில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன் பங்கேற்று, சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், சி.இ.ஓ., கார்த்திகா, டி.இ.ஓ., ஜோதிமணி, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் தண்டபாணி உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us