புதிய மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்
புதிய மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்
UPDATED : ஏப் 09, 2026 12:46 PM
ADDED : ஏப் 09, 2026 12:47 PM

ராமநாதபுரம்:
திருப்புல்லாணி அருகே புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
திருப்புல்லாணி ஒன்றியம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2026ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விழா நடந்தது.
திருப்புல்லாணி வட்டாரக் கல்வி அலுவலர் மல்லிகா தலைமை வகித்தார். புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து கோயிலில் அர்ச்சனை செய்து தலையில் பரிவட்டம் கட்டப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.
பள்ளியின் வாசலில் ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாணவர்களிடம் இருந்து சேர்க்கை விண்ணப்பம் பெற்று நோட்டு, பென்சில் வழங்கப்பட்டது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி, தலைமையாசிரியர் செங்கோல் திரவியம், இடைநிலை ஆசிரியர்கள் ராஜசேகர செல்லப்பா, ஆரோக்கிய குமரன், ஜார்ஜ் குயின், கோட்டைச் செல்வி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
