UPDATED : ஜூலை 01, 2026 10:58 AM
ADDED : ஜூலை 01, 2026 10:58 AM
உசிலம்பட்டி:
கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியருக்கு பணி மறுநியமன ஆணை வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் நலன் கருதி கல்வி ஆண்டு நிறைவு வரை மறு பணி நியமனம் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதன்படி பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி மறுநியமன ஆணை வழங்கப்படும் என இயக்குனரும், துறை அமைச்சரும் உறுதி அளித்திருந்தனர்.
தற்போது வரை பணி மறுநியமன ஆணையை வழங்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் வட்டாரக்கல்வி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறு பணி நியமன ஆணை வழங்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
