தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமைச்சர் மகேஷுக்கு டிட்டோ - ஜாக் கெடு

அமைச்சர் மகேஷுக்கு டிட்டோ - ஜாக் கெடு

அமைச்சர் மகேஷுக்கு டிட்டோ - ஜாக் கெடு


UPDATED : ஆக 19, 2025 12:00 AM

ADDED : ஆக 19, 2025 09:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2025 12:00 AM ADDED : ஆக 19, 2025 09:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, டிட்டோ - ஜாக், தன் 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற, நான்கு நாட்கள் கெடு விதித்துள்ளது.

மத்திய அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 17, 18ம் தேதிகளில் போராட்டம் நடத்துவதாக, டிட்டோ - ஜாக் அறிவித்திருந்தது. வரும் 22ல், தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டிட்டோ - ஜாக் நிர்வாகிகளுடன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டது. கோரிக்கைகள் குறித்து, முதல்வரிடம் தெரிவிப்பதாகவும், முக்கிய கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து, சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த டிட்டோ - ஜாக் அமைப்பின் செயற்குழு கூட்டத்தில், கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் மகேஷுக்கு, 22ம் தேதி வரை அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதற்குள் உரிய அறிவிப்பை வெளியிடாவிட்டால், போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us