UPDATED : அக் 06, 2026 01:23 PM
ADDED : அக் 06, 2026 01:24 PM
அ நிறம் | அளவு
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 810 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது.
பள்ளிக்கு முதல் நாளில் வருகை புரிந்த, 755 மாணவ, மாணவியருக்கு, இரண்டாம் பருவ விலையில்லா பாடப்புத்தகம், எழுது பொருட்கள், சீருடைகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை, மாநகராட்சி கவுன்சிலர்
ரஜினிகாந்த், பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ் ஆகியோர் வழங்கினர்.
அதே போல், கெலமங்கலம் அருகே ஆனோகொள்ளு பஞ்., உட்பட்ட தொட்டபேளூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர், 86 பேருக்கு, 2ம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், கல்வி உபகரணங்களை, பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசுலு வழங்கினார்.
