பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு 'தாம்ப்ராஸ்' பாராட்டு
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு 'தாம்ப்ராஸ்' பாராட்டு
UPDATED : ஆக 17, 2026 03:18 PM
ADDED : ஆக 17, 2026 03:22 PM
கோவை:
தாம்ப்ராஸ் சங்கம் கோவை மாவட்டம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, முதல்வன் விருது மற்றும் நற்சான்று வழங்கும் விழா, ராம்நகர் சுபஸ்ரீ திருமண மண்டபத்தில் நடந்தது.
கோவை மாவட்ட தலைவர் வெங்கட்ரமணன் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் வெங்கட்நாராயணன் வரவேற்றார். சேர்மன் ராகவநாராயணன், மாநில தலைவர் ராஜ்குமார், மாநில துணை தலைவர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, முதல்வன் விருது வழங்கி ஆசிர்வதித்து, ஸ்ரீ சாவித்திரி குரு, ஸ்ரீமாருதி ராமசாமி, ஸ்ரீ கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தாம்ப்ராஸ் சங்க மாநில பொது செயலாளர் ஸ்ரீரங்கம் வரதராஜ ஐயங்கார், விழா எழுச்சியுரை வழங்கினார். பொருளாளர் பரத்குமார் நன்றி கூறினார். திரளான மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர்.
