தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கான பிக்பேங் நிகழ்ச்சி கோவையில் வரும் 30ல் நடக்கிறது

மாணவர்களுக்கான பிக்பேங் நிகழ்ச்சி கோவையில் வரும் 30ல் நடக்கிறது

மாணவர்களுக்கான பிக்பேங் நிகழ்ச்சி கோவையில் வரும் 30ல் நடக்கிறது


UPDATED : ஜூன் 21, 2024 12:00 AM

ADDED : ஜூன் 21, 2024 07:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2024 12:00 AM ADDED : ஜூன் 21, 2024 07:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டும் வகையில், அறிவியல் பயிற்சி பயிலரங்குகள் நடத்திவரும், சிட்டி நிறுவனத்தின் பிக்பேங் என்ற நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், வரும் 30ம் தேதி நடக்கிறது.

இந்நிகழ்ச்சியில், மாணவர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமான பல்வேறு அறிவியல் சோதனைகளையும், செய்முறைகளையும் செய்துகாட்டப்படுகிறது.

சிட்டி நிறுவனத்தின் நிறுவனர் பிரேம் ஆனந்த் கூறியதாவது:

மாணவர்களுக்கு, புத்தகத்தில் படிக்கும் விஷயங்களை, சோதனை செய்து காட்டும்போது, அதிகளவிலான விஷயங்களை அளிக்க முடியும். வேதியியல் மீது ஆர்வத்தை துாண்டும் வகையில், உடனடி எலிபேன்ட் டூத்பேஸ்ட் தயாரித்தல், திரவ நைட்ரஜன் மூலம் தர்பூசணியை வெடிக்க செய்தல் போன்ற செய்முறைகளும், இயற்பியல் மீது ஆர்வத்தை துாண்டும் வகையில், காற்றழுத்த பீரங்கி, சுழல் புகை உந்தி போன்ற செய்முறைகளும் நிகழ்ச்சியில் செய்து காட்டப்படும்.

இத்துடன், ஏரோநாட்டிக்கல் மீதான ஆர்வத்தை துாண்டும் வகையில், மாதிரி வானுார்தி கண்காட்சியும், செயற்கை நுண்ணறிவு ரோபோ காட்சியும் நடக்கிறது.

இந்நிகழ்ச்சி, கோவை அவிநாசி ரோடு, நவஇந்தியாவில் உள்ள, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில், வரும் 30ம் தேதி காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர், இந்த செய்தியில் உள்ள க்யூ.ஆர்.கோடு வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 98842 22368 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us