புதிய தொழில்நுட்ப படிப்புகளுக்கு எதிர்காலம் பிரகாசம்; உதவி பேராசிரியர் ஆனந்தகுமார் பேச்சு
புதிய தொழில்நுட்ப படிப்புகளுக்கு எதிர்காலம் பிரகாசம்; உதவி பேராசிரியர் ஆனந்தகுமார் பேச்சு
UPDATED : மார் 31, 2025 12:00 AM
ADDED : மார் 31, 2025 09:19 AM
புதுச்சேரி:
தொழில் நுட்பங்களைச் சார்ந்த பொறியியல் பிரிவுகளை தேர்ந்தெடுத்து எதிர்காலத்தை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம் என, உதவி பேராசியர் ஆனந்தகுமார் பேசினார்.
புதிய தொழில்நுட்ப படிப்புகள் குறித்து கோவை ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உதவி பேராசிரியர் ஆனந்தகுமார் பேசியதாவது:
உலகை ஆளப்போகும் எதிர்கால பொறியியல் படிப்புகளும் அசூரரமாக அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகின்றன. இவற்றில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில், ஆர்ட்டிபிஷியல் இன்டிலிஜென்ஸ் அண்ட் மெக்கானிக் லேர்னிங், இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், சைபர் செக்யூரிட்டி, ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன், குவாண்டம் கம்ப்யூட்டிங், கிளவுடு கம்ப்யூட்டிங், 3 டி பிரின்டிங் என எதிர்காலத்தை ஆளும் படிப்புகள் மிக முக்கியமானவை.
இந்த எதிர்காலம் தொழில் நுட்பங்களைச் சார்ந்த பொறியியல் பிரிவுகளை தேர்ந்தெடுத்து எதிர்காலத்தை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம். ஒரு காலத்தில் நோய் கண்டறிவது என்பது சவாலான காரியம். நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவர்.
இன்றைக்கு அப்படி இல்லை. ஆர்ட்டிபிஷியல் இன்டிலிஜென்ஸ் ெஹல்த் கேர் துறையில் நுழைந்து விட்டது. முன்கூட்டியே நோய் அறிகுறிகளை கண்டறிய முடியும்.
மார்க்கெட்டிங் துறையிலும் ஆர்ட்டிபிஷியல் இன்டிலிஜென்ஸ் முக்கிய இடத்தினை பிடித்துள்ளது. நீங்கள் ஏதாவது, பிளிப்கார்ட் அல்லது அமேசானில் ஒரு மொபைல் போனை தேடினாலே போதும், அடுத்த சில நிமிடங்களின் உங்களுடைய தேடுதல் எண்ணங்களை நாடி பிடித்து பார்த்து, அதேபோன்ற பொருட்கள் உங்களின் பார்வைக்கு வரிசையாக வந்து கொண்டு இருக்கும். அந்த அளவிற்கு இத்துறையில் ஆர்ட்டிபிஷியல் இன்டிலிஜெவ்ஸ் தாக்கம் உள்ளது.
மனிதன் கம்ப்யூட்டர் டேட்டாபேஸில் தகவல்களை பதிந்தகாலம் போய் மிஷின்களே நேரடியாக டேட்டாவை பதிந்துவிடுகின்றன. அதிலும் இன்டர்நெட் வழியாக தெரியுமா. அதாவது மெஷினும் மெஷினும் பேசிக்கொள்கின்ற காலகட்டத்திற்குள் நாம் வந்துவிட்டோம். இது தான் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் புதிய தொழில்நுட்பத்தின் அழகு.
நீங்கள் எங்கு போய் இருந்தாலும் கூட உங்கள் வீடு, அலுவலகத்தை கண்காணிக்க முடியும். அதுவும் மொபைல் வழியாக கண்காணித்துவிட முடியும். அந்த அளவிற்கு இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் இன்றைக்கு பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற உலகினை மாற்றக்கூடிய புதிய தொழில்நுட்ப படிப்புகளை எடுத்து படியுங்கள். உங்களுடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.