கூட்டுறவு மேலாண் பயிற்சியின் பழைய பாட திட்டம் முடிகிறது
கூட்டுறவு மேலாண் பயிற்சியின் பழைய பாட திட்டம் முடிகிறது
UPDATED : மே 02, 2024 12:00 AM
ADDED : மே 02, 2024 10:01 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2002ம் ஆண்டு முதல், 2021ம் ஆண்டு வரை முழு நேர மேலாண்மை பட்டய பயிற்சி மற்றும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி திட்டத்தில், ஏழு பாடங்கள் அடங்கிய பாட திட்டம் இருந்தன.
கடந்த, 2022ம் ஆண்டு முதல், 10 பாட திட்டங்கள் அடங்கிய புதிய பாட திட்டமாக, இரு பருவ பயிற்சிகளுக்கு நடந்து வருகின்றன. இந்த பழைய பாட திட்டங்கள், 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முடிவு கட்டப்பட உள்ளது.
எனவே, பழைய பாட திட்டத்தில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்கள் ஒரு ஆண்டிற்குள் துணைத் தேர்வில் பங்கேற்கலாம். தவறும் பயிற்சியாளர்கள், புதிய பாட திட்டத்தின்படி முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்ந்து, மீண்டும் பயிற்சி பெற்றால் மட்டுமே, பட்டயச் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.6, வந்தவாசி சாலை, கலெக்டர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் என்கிற முகவரி மற்றும் 044- 27237699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய முதல்வர் சேகர் தெரிவித்து உள்ளார்.