sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விடுமுறையிலும் தமுக்கம் புத்தக கண்காட்சியில் குவிந்த மதுரை மக்கள்

/

விடுமுறையிலும் தமுக்கம் புத்தக கண்காட்சியில் குவிந்த மதுரை மக்கள்

விடுமுறையிலும் தமுக்கம் புத்தக கண்காட்சியில் குவிந்த மதுரை மக்கள்

விடுமுறையிலும் தமுக்கம் புத்தக கண்காட்சியில் குவிந்த மதுரை மக்கள்


UPDATED : செப் 09, 2024 12:00 AM

ADDED : செப் 09, 2024 08:21 AM

Google News

UPDATED : செப் 09, 2024 12:00 AM ADDED : செப் 09, 2024 08:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்ற போதும் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியில் மக்கள் தங்களின் அறிவுத் தேடலுக்கு புத்தகங்களை வாங்க குவிந்தனர்.

அலைகள் மட்டுமா… அறிவுக்கான தேடலும் எப்போதும் ஓய்வதில்லை. புத்தகங்கள் நாள்தோறும் நம்மை புதுப்பிக்கும் வழிகாட்டிகள். விதை எப்படி முளைக்கும் போது சத்தமின்றி எழுகிறதோ அதுபோல புத்தகங்களை படிக்கும் போது மனதுக்குள் சத்தமின்றி சிந்தனைத்திறன் உருவாகும். அதை தட்டி எழுப்பும் விசித்திர பூட்டுகள் தான் புத்தகங்கள். மனதை திறக்கும் மந்திரக்கோலும் இதுவே.

தேனை சுவைக்கும் தேனீக்களாய் புத்தகங்களை தேடி வரும் வாசகர்கள் ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறார்கள், சிறுவர் இலக்கியத்திற்கு இப்போது வரவேற்பு அதிகம். இங்குள்ள 231 ஸ்டால்களில் பெரும்பாலும் சிறுவர் இலக்கியம் மலர்ந்துள்ளது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

தினமலர் ஸ்டால்



தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஸ்டாலில் புகழ்பெற்ற எழுத்தாளர்களான இந்திரா சௌந்தர்ராஜன், வரலொட்டி ரங்கசாமி, ஜி.எஸ்.எஸ்., ஆர்னிகா நாசர், திருப்பூர் மதிவண்ணன், ஹேமா பாஸ்கர் ராஜூ, தராசு ஷ்யாம், ராஜாராம், ஆர்.வி.பதி, ராஜசேகரன், சந்திரசேகரன், ரஜத், வெங்கட் சுப்பிரமணியம், முத்தாலங்குறிச்சி காமராசு, மோகன்தாஸ், ஜி.வி. ரமேஷ் குமார் எழுதிய புத்தகங்கள் கிடைக்கின்றன. அந்துமணியின் பார்த்தது கேட்டது படித்தது 15 பாகங்கள், தொகுப்பாசிரியர் சமஸ் எழுதிய சோழர்கள் இன்று புத்தகம், மகா பெரியவா தொகுதிகள், பொன்னியின் செல்வன் புத்தகத் தொகுதிகள், ஆன்மிக, அறிவியல், நவீன கதை புத்தகங்கள் இங்குள்ளன.

செப்.16 வரை தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். மாலை 6:00 மணிக்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம், கருத்தரங்கு நடைபெறும். அனுமதி இலவசம். பள்ளி மாணவர்களுக்கு புத்தக விற்பனையில் தள்ளுபடி உண்டு. மாவட்ட நிர்வாகம் சார்பில் தினமும் பள்ளி மாணவர்கள் 2000 பேர், கல்லுாரி மாணவர்கள் 1500 பேரை பஸ்சில் இலவசமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தகங்கள் இலவசம்



புத்தக கண்காட்சியில் 4, 5ம் ஸ்டால்களில் அமைக்கப்பட்டுள்ள தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. தினமலர் ஆண்டு சந்தா ரூ.1999 செலுத்தினால் ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்களை இலவசமாக பெறலாம்.






      Dinamalar
      Follow us