தேர்வுத்துறை இயக்குனர் திடீர் ஆய்வு கல்வி அதிகாரிகள் மத்தியில் அச்சம்
தேர்வுத்துறை இயக்குனர் திடீர் ஆய்வு கல்வி அதிகாரிகள் மத்தியில் அச்சம்
UPDATED : மே 29, 2024 12:00 AM
ADDED : மே 29, 2024 08:04 AM

விழுப்புரம் :
விழுப்புரம் மாவட்ட கல்வி துறையில் எழுந்துள்ள புகார்களை விசாரிக்க உயர் அதிகாரிகள் வந்ததை மறைக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளிக்கல்வி துறை வகுத்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாகவும், இங்குள்ள சில அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாகவும் பள்ளிக்கல்வி துறை தலைமையகத்திற்கு புகார் சென்றுள்ளது.
அதன் பேரில், தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வக்குமார் ஆகியோர் விழுப்புரம் மாவட்ட சி.இ.ஓ., அலுவலகத்திற்கு வந்து, புகாரில் கூறப்பட்ட சம்பந்தபட்டோரை நேரில் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
இந்த தகவலை, வெளியே தெரியாமல் மறைப்பதற்காக மாவட்ட கல்வி அதிகாரி ரகசியம் காத்துள்ளார்.
இந்த விசாரணையில், புகாரில் கூறப்பட்டோரை, ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் செமடோஸ் விட்டுள்ளனர். இதில் சிக்கியுள்ள விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள், தலைமை அலுவலகத்தில் இருந்து எந்த நேரத்தில் என்ன உத்தரவு வருமோ என்ற அச்சத்திலே தங்களுக்குள் புலம்பியபடி பணி செய்து வருகின்றனர்.