UPDATED : டிச 02, 2024 12:00 AM
ADDED : டிச 02, 2024 08:39 AM
சென்னை:
யு.ஜி.சி., எனும் பல்கலைக்கழக மானியக்குழு, வேல்ஸ் நிறுவனத்திற்கு நாக் தரச்சான்று வழங்கியுள்ளது.
இதை கொண்டாடும் வகையில், பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் நிறுவனத்தில், நிகழ்ச்சி நடந்தது.
இதில், நிறுவனர் கணேஷ் பேசியதாவது:
பல்கலை மானியக்குழுவால் வழங்கப்படும் அதிகபட்சமாக 'ஏ பிளஸ் பிளஸ்' தரச்சான்று வழங்கப்படும். நாட்டில் 10,000 உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆனால் 57 பல்கலைக்கு மட்டுமே இந்த சான்று கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் நம் பல்கலையும் இடம் பெற்றுள்ளது. இது, பெற்றோர், மாணவர்கள் இடையே நம் தரத்தை உரக்க கூறும்.
இச்சான்று பேரராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த குழுவை வழிநடத்திய, வேல்ஸ் குழுமங்களின் துணை தலைவர் ப்ரீத்தா கணேஷ், இணை வேந்தர் ஜோதி முருகன், ஆர்த்தி கணேஷ் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.
வேல்ஸ் குழுமம் 52 நிறுவனங்கள், 34 வளாகங்கள், 7,700 ஊழியர்கள், 48 ஆயிரம் மாணவர்களுடன் பயணித்து வருகிறது. விரைவில் 100 நிறுவனங்களை துவங்குவதை இலக்காகக் கொண்டு நம் பயணத்தை தொடருவோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.