தனியார் பள்ளிக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
தனியார் பள்ளிக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
UPDATED : அக் 24, 2024 12:00 AM
ADDED : அக் 23, 2024 10:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
பிரபல தனியார் பள்ளிக்கு, மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
கோவை - அவிநாசி சாலையில் உள்ளது, ஸ்டேன்ஸ் பள்ளி. 6,000க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு கடந்த, 7ம் தேதி துவங்கி, நேற்று வரை மூன்று முறை இ-மெயிலில், வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
போலீஸ் சோதனையில் வழக்கம் போல், அது புரளி என தெரியவந்தது. இதே பள்ளிக்கு மட்டுமல்லாமல், நகரில் வேறு மூன்று தனியார் பள்ளிகள், விமான நிலையம், ஓட்டல், மருத்துவமனைகளுக்கும், கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.