தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருக்குறள் வார விழா போட்டி; மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

திருக்குறள் வார விழா போட்டி; மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

திருக்குறள் வார விழா போட்டி; மாணவர்களுக்கு பரிசு வழங்கல்


UPDATED : ஜன 12, 2026 12:59 PM

ADDED : ஜன 12, 2026 12:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2026 12:59 PM ADDED : ஜன 12, 2026 12:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: திருக்குறள் வார விழா போட்டியில் வெற்றி பெற்ற, மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை, உயர்கல்வித்துறை சார்பில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கோவிந்தராஜ் வரவேற்றார். கருத்தரங்கை கல்லுாரி முதல்வர் கோபி துவக்கி வைத்தார். கருத்தரங்கில், கடையநல்லுார் கல்லுாரி முதல்வர் வேலம்மாள், 'திருக்குறள் இல்லறக்கோட்பாடு' என்ற தலைப்பிலும், கோவை அரசு கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பூங்கொடி, 'தனி மனித அறம்' என்றதலைப்பிலும், கேரள அரசு கல்லுாரி பேராசிரியர் மகேஸ்வரி, 'திருக்குறளில் காமம், சொல்லாட்சியும், பொருள்நீட்சியும்' என்ற தலைப்பிலும் பேசினர்.

பொள்ளாச்சி அரசு கல்லுாரி பேராசிரியர் மேனகா, 'திருக்குறளில் அறிவான்மை' என்ற தலைப்பிலும், கோவை பி.எஸ்.ஜி., கலைக்கல்லுாரி பேராசிரியர் ராம்கணேஷ், 'திருக்குறளில் காதல்புலப்பாடு' என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர்.

அதனை தொடர்ந்து, திருக்குறள் வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்பரிசாக, 4,500 ரூபாய், இரண்டாவது பரிசாக, 3,500 ரூபாய், மூன்றாவது பரிசாக, 2,500 ரூபாய் வழங்கி பாராட்டி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us