UPDATED : பிப் 25, 2025 12:00 AM
ADDED : பிப் 25, 2025 10:05 PM

''மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று எண்ணி தூக்கத்தை இழக்க நான் விரும்புவதில்லை. நம்மை குறைகூறுபவர்களை மன்னித்து, நமது செயல்களை தொடர்ந்து செய்வதே மன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான ரகசியம்'' என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார்.
'மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோலவும், அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருப்பது போலவும் நாம் நினைக்கிறோம். அதுவே மன அழுத்தத்திற்கு காரணமாகவும் அமைகிறது. உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள்.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்தாலே, பாதி பிரச்னைகள் குறைந்துவிடும். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும், மன அழுத்தத்திற்கு ஆளாகமல் இருப்பதற்கும் சில விஷயங்களில் கவனக்குறைவாக இருப்பதும் உதவும்' என்று அவர் மேலும் குறிபிட்டுள்ளார்.