UPDATED : ஜூலை 07, 2025 12:00 AM
ADDED : ஜூலை 07, 2025 10:35 AM
சென்னை: 
தமிழக தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, டிட்டோ ஜாக் பேரமைப்பின், மாநில உயர்மட்டக்குழு கூட்டம், நேற்று முன்தினம் மாலை, வீடியோ கான்பரன்ஸ் வழியே நடந்தது.
போராட்ட ஆயத்த கூட்டங்கள் நடக்காத மாவட்டங்களில், இன்றும், நாளையும் கூட்டம் நடத்துவது; பிரசார இயக்கத்தை 10, 11, 14ம் தேதி நடத்துவது; கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 16 முதல் 18ம் தேதி வரை, திட்டமிட்டபடி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடக்கக்கல்வி துறையில், நடப்பாண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில், பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கவில்லை. இதனால், பொது மாறுதல் கலந்தாய்வை, ஆசிரியர்கள் முழுமையாக பெற முடியாத நிலை உள்ளது. ஒன்றிய முன்னுரிமையை பின்பற்றி, முன்னர் போல பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
 

