3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
UPDATED : ஏப் 25, 2025 12:00 AM
ADDED : ஏப் 25, 2025 05:25 PM

சென்னை:
தமிழகத்தில் 3,935 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறும். இன்று முதல் மே மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 3,935 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறும். ஜூலை 12ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும். இன்று முதல் மே மாதம் 24ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

