UPDATED : மார் 31, 2024 12:00 AM
ADDED : மார் 31, 2024 09:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்:
ராசிபுரம் ஒன்றியத்தில், தனியார் வேளாண் கல்லுாரி மாணவிகள் கிராமப்புறங்களில் தங்கி வேளாண்மை பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள காளான் பண்ணை மற்றும் தேனீ பண்ணையில், சிப்பி காளான் வளர்ப்பு பற்றி பயிற்சி பெற்றனர். பயிற்சியாளர் கோபால் சிப்பி காளான் வளர்ப்பு பற்றியும், அதன் அமைப்பு பற்றியும், லாபம் பற்றியும், அதன் செலவு மற்றும் சந்தைப்படுத்தல் பற்றியும் விளக்கமளித்தார். மேலும் தேனீ வளர்ப்பு குறித்தும் பயிற்சி பெற்றனர்.