ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: டி.ஆர்.ஓ., ஆய்வு
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: டி.ஆர்.ஓ., ஆய்வு
UPDATED : மார் 31, 2024 12:00 AM
ADDED : மார் 31, 2024 09:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்:
லோக்சபா தேர்தலையொட்டி, சங்கராபுரம் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி அனைத்து நிலை அலுவலர்களுக்கு ஒருநாள் பயிற்சி ஜெயம் பள்ளியில் நடந்தது.
தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ் ஆகியோர் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எப்படி இயக்குவது. கட்டுப்பாட்டு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது. படிவங்களை பூர்த்தி செய்வது, ஓட்டுப்பதிவின் போது என்னென்ன பணிகள் மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.