அரசு இசை கல்லுாரியில் இன்று முதல் பயிற்சி துவக்கம்
அரசு இசை கல்லுாரியில் இன்று முதல் பயிற்சி துவக்கம்
UPDATED : மே 01, 2024 12:00 AM
ADDED : மே 01, 2024 10:59 AM

கோவை:
ஐந்து முதல், 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி கல்வி பயிலும் மாணவர்களுக்கு கலைப்பயிற்சி வழங்குதல், அவர்களது கலைத்திறமைகளை வெளிக்கொணர்தல், கலைக்கல்வி வழங்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் ஜவஹர் சிறுவர் மன்றங்கள் செயல்படுகின்றன.
கோவை மண்டலத்தில் செயல்படும் மன்றத்தில் பரதநாட்டியம், குரலிசை, யோகா மற்றும் ஓவியம் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஐந்து முதல், 16 வயது வரையிலான மாணவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை பிற்பகல், 3:00 முதல் மாலை, 5:00 மணி வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை, பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவை மலுமிச்சம்பட்டி அரசு இசைக்கல்லுாரி வளாகத்தில், ஜவஹர் சிறுவர் மன்றம் செயல்படுகிறது. கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில், இன்று (மே 1) முதல், 10ம் தேதி வரை மாணவர்களுக்கு பரத நாட்டியம், குரலிசை, யோகா மற்றும் ஓவியம் கற்றுத்தரப்படுகிறது. விபரங்களுக்கு, 97515 28188 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
பயிற்சி முடிந்ததும் நிறைவு நாளன்று பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும் என, கோவை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.