7 இடங்களில் 9,614 ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
7 இடங்களில் 9,614 ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
UPDATED : மார் 29, 2024 12:00 AM
ADDED : மார் 29, 2024 11:01 AM

விழுப்புரம்:
மாவட்டத்தில், 7 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1,966 ஓட்டுச்சாவடி மையங்களில், தேர்தலின்போது பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 9,614 ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கும் முதல் கட்ட பயிற்சி நடந்தது.
அதன்படி, செஞ்சி தொகுதிக்குட்பட்ட 1,588 ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு, செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி. மயிலம் தொகுதிக்குட்பட்ட 925 அலுவலர்களுக்கு மயிலம் பவ்டா கல்லுாரி. திண்டிவனம் (தனி) தொகுதிக்குட்பட்ட 1,461 அலுவலர்களுக்கு, திண்டிவனம் மான்போர்ட் பள்ளி.
வானுார் (தனி) தொகுதிக்குட்பட்ட 1,080 அலுவலர்களுக்கு அரவிந்தர் கலை அறியியல் கல்லுாரி.
விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட 1,704 அலுவலர்களுக்கு விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கல்லுாரியிலும், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட 1,366 அலுவலர்களுக்கு லட்சுமிபுரம் சுவாமி விவேகானந்தா கல்லுாரியிலும், திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட 1,490 அலுவலர்களுக்கு திருக்கோவிலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும், என மொத்தம் 9,614 ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு, முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்து.
இப்பயிற்சியில் அந்தந்த மண்டல அலுவலர்கள் பங்கேற்று ஓட்டுப்பதிவு பணிகள் குறித்து விளக்கி பயிற்சியளித்தனர்.

